-ஹேக் செய்யப்பட்ட ஹன்சிகாவின் போன்- தகவல் கசிந்ததா? - Yarl Thinakkural

-ஹேக் செய்யப்பட்ட ஹன்சிகாவின் போன்- தகவல் கசிந்ததா?

யூஆர் ஜமீல் இயக்கத்தில் மகா படத்தில் நடித்து வருகிறார் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவரது ஸ்மார்ட்போன் தற்போது ஹேக் செய்யப்பட்டுள்ளது.

இவரது அந்தரங்க புகைப்படங்கள் இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இதில் அவர் டூ பீஸ் பிகினி அணிந்து கண்ணாடி முன் போஸ் கொடுத்த வீடியோவும் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து ஹன்சிகா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘என் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது. என் நம்பரிலிருந்து குறிஞ்செய்தி வந்தால் அதனை புறக்கணிக்கவும். எங்கள் மென்பொருள் டீம் அதனை நிவர்த்தி செய்ய ஆவண செய்துவருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானின் பேஸ்புக் பக்கம் இவ்வாறு ஹேக் செய்யப்பட்டது. இதுபோல பிரபலங்களின் ஸ்மார்ட்போன்கள் அடிக்கடி மர்ம நபர்களால் ஹேக் செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக ஹன்சிகா காவல்துறையிடம் புகார் அளிக்கவில்லை. முன்னதாக ஹன்சிகாவின் வீடியோ ஒன்று வெளியாகியது. அதில் இருப்பது தான் அல்ல என ஹன்சிகா விளக்கம் அளித்திருந்தார்.
Previous Post Next Post