கடற்படையின் ஆக்கிரமிப்பை நிறுத்து! -நிலையான மீன்படி கொள்ளை வெளியீடு- - Yarl Thinakkural

கடற்படையின் ஆக்கிரமிப்பை நிறுத்து! -நிலையான மீன்படி கொள்ளை வெளியீடு-

வடமாகாணத்தில் திட்டமிட்டு கடற்படையால் அபகரிக்கப்படும் கடற்பரைப் பகுதிகள் மீட்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடனான நிலையான மீன்பிடி கொள்கைக்கான முன்மொழிவுகள் இன்று வெள்ளிக்கிழமை வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண நிலையான மீன்பிடி கொள்கைக்கான முன்மொழிவுகள் வெளியீடும் மாகாண கடற்றொழிலாளர் அபிவிருத்திக்கான இணை முகாமைத்துவ கலந்துரையாடலும் வடமாகாண மீனவர் இணைய தலைவர் ஜனாப் என் எம் ஆலம் தலமையில் யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் நேற்று இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதிகளாகா தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க தலைவர் கேமன் குமார யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி சூசை தாசன் விரிவுரையாளர் செ.ரவீந்திரன் அகியோரும் கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்களின் மீன்பிடி நீரியல் வள திணைக்கள் அதிகாரிகள கடற்படை அதிகாரிகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன, தமிழர் சுயாட்சி கழக பொது செயலரும் மாகாண முன்னாள் அமைச்சரமான அனந்தி சசிதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வடமாகாண மீன்பிடி இணைய தலைவர் செயலாளர் உறுப்பினர்கள் மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க தலைவர் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோர் வெளியிட்டு வைக்க யாழ் பல்கலைக் கழக பேராசிரியர் கலாநிதி சூசைதாசன் விரிவுரையாளர் செ.ரவீந்திரன யாழ் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் ஆகிய மாவட்ட மீன்பிடி நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் கடற்படை அதிகாரிகள் அகியோர் பெற்றுக் கொண்டனர்.

இதே வேளை இங்கு உரையாற்றிய அனைவரும் மீனவர்களையும் மீன்பிடியையும் பாதுகாக்கின்ற சட்டங்கள் கடந்த வருடம் கொண்டு வரப்பட்டும் குறிப்பாக 2017 ம் ஆண்டின 11 ம் இலக்க இழுவை மடி தடை சட்டம் மற்றும் வெளிநாட்டு படகுகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு மீன்பிடி வள்ளங்களை ஒழுங்கு படுத்தும் 2018. ம் ஆண்டின் முதலாம் இலக்க சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தும்படி அரசையும் அரச அதிகாரிகள் துறைசார் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதேவளை வடமாகாணத்தில் திட்டமிட்ட கரையோர குடியேற்றங்களை நிறுத்துமாறும் தேசிய பூங்கா எனும் பெயரில் மீனவர்களின் வாழ்விடங்கள் மற்றும் கரையோரத்தில் மீனவர் கரைவலை பாடுகள் உட்பட. பல ஏக்கர் மீனவர் காணிகள் கடற்படையால் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
Previous Post Next Post