ஊடக படுகொலைக்கு எதிராக யாழில் போராட்டம்! - Yarl Thinakkural

ஊடக படுகொலைக்கு எதிராக யாழில் போராட்டம்!

திருமலையில் வைத்து 2016ம் ஆண்டு படுகொலையான சக ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களிற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க ஊடக அமைப்புக்கள் தயாராகிவருகின்றன.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13 வது ஆண்டு நினைவேந்தல் நாளில் ஊடக படுகொலைகளிற்கான நீதி கோரி ஊடக அமைப்புக்கள் பங்கெடுக்கும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை யாழிலுள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபி முன்றலில் நடத்த அவை திட்டமிட்டுள்ளன.

ஏதிர்வரும் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்.ஊடக அமையத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள போராட்டத்தில் வடக்கு கிழக்கு ஊடக அமைப்புக்கள்இ மற்றும் தென்னிலங்கை சகோதர ஊடக அமைப்புக்கள் இணைந்து பங்கெடுக்கின்றன.

ஊடகப்படுகொலைக்கான நீதி கோரும் இப்போராட்டத்தில் அனைவரையும் திரண்டு நீதிக்காக குரல் கொடுக்க ஊடக அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.

ஊடகவியலாளர் சுகிர்தராஜன் திருமலையில் இலங்கை அதிரடிப்படைகளால் அரங்கேற்றப்பட்ட ஜந்து பாடசாலை மாணவர்களது படுகொலையினை அரங்கேற்றிய நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தது தெரிந்ததே.
Previous Post Next Post