அட்டை படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை! - Yarl Thinakkural

அட்டை படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை!

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை வித்யா பாலன். இவர் நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவருக்கு பாலிவுட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது முதன் முறையாக தமிழில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ள அஜித்துக்கு ஜோடியாக இவர் நடிக்கிறார்.

இந்தப் படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளார். படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்நிலையில் நடிகை வித்யா பாலன் தற்போது பிரபல புகைப்பட கலைஞர் தாபு ரத்நானியின் காலண்டர் அட்டை படத்திற்கு மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

நேற்று நடந்த காலண்டர் அறிமுக விழாவில் நடிகை வித்யா பாலனும் கலந்து கொண்டார்.

அப்போது தன்னுடைய கவர்ச்சியான காலண்டர் அட்டை படத்துடன் வித்யான பாலன் போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Previous Post Next Post