இணுவிலைப் பிரிக்காதே! -மீண்டும் மக்கள் மனு- - Yarl Thinakkural

இணுவிலைப் பிரிக்காதே! -மீண்டும் மக்கள் மனு-

யாழ்.இணுவில் மஞ்சத்தடிப் பகுதியை வேறு நிர்வாகக் கட்டமைப்புக்குள் கொண்டு செல்ல வேண்டாம் என வலியுறுத்தி, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று மனுக் கையளிக்கப்பட்ட்து.

இணுவில் கிராமம் பல சித்தர்கள் வாழ்ந்த பிரதேசமாகும். இந்த கிராமத்தைப் பல துண்டுகளாக பிரித்து இணுவில் என்கின்ற அடையாளத்தையும், வரலாற்றையும் மாற்றுவதற்கு சில சக்திகள் முனைகின்றனர்.

எனவே இணுவில் மஞ்சத்தடி பிரதேசமானது நல்லூர் பிரதேச செயலக ஆளுகைக்குள் இருந்து வருகின்றது. இந்நிலையில் நல்லூர் பிரதேச செயலகத்தின் ஆளுகையை விட்டு பறிகொடுக்க எப்போதும் அனுமதிக்க மாடடோம் எமது கிராம அலுவலர் பிரிவின் பெயரான கோண்டாவில் வடமேற்கு என குறிப்பிட்டுள்ள பெயரை இணுவில் மஞ்சத்தடி கிராம அலுவலர் பிரிவு என பெயர் மாற்றம் செய்து தருமாறும் கோரிக்கை விடுக்கின்றோம் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிராம மக்களின் கையொப்பங்களை அடங்கிய மனு யாழ்ப்பாண மாவட்ட மேலதிக செயலரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post