அரசு தீர்வை வழங்காது! -ஆனாலும் முயட்சிப்போம் என்கிறார் சித்தாத்தன்- - Yarl Thinakkural

அரசு தீர்வை வழங்காது! -ஆனாலும் முயட்சிப்போம் என்கிறார் சித்தாத்தன்-

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்களுடைய அபிலாசைகளை நிறைவேற்றும் தீர்வினை அரசால் வழங்க முயாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கந்தரொடையிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

அரசியல் தீர்வு சம்மந்தமாக 2015 ஆம் ஆண்டு தொடக்கம் செயற்பாடுகள் நடந்து கொண்டு வருகின்றன. பாராளுமன்றம் பேரவையாக மாற்றப்பட்ட நடவடிக்கைககள் குழு அதற்கு கீழ் உபகுழக்கள் என்று இப்படியாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு இடைக்கால அறிக்கை போடப்பட்டிருந்தாலும் கடந்த நவம்பர் மாதம் இரண்டாவது அறிக்கை வெளி வருவதாக இருந்தது.

ஆனாலும் நாட்டில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அந்த நடவடிக்கைகள் எல்லாம் பிற்போடப்பட்டிருந்தன. இவ்வாறான நிலைமையில் தமிழ் மக்களுடைய அபிலாசைகளைத் தீர்க்கக் கூடிய அரசியல் தீர்வை எடுக்க முடியுமென்று நான் நம்பவில்லை. அது இந்த அரசாலும் தீர்க்க முடியாது. அது மிகவும் கஸ்ரமான வேலை.

ஆதற்காக அந்த முயற்சிகளை கைவிடவும் முடியாது. தொடர்ந்தும் அதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். முயற்சிகளை எடுக்க வேண்டும்.

சர்வதேச ரீதியில் கூட அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும் அவர்கள் குறிப்பிட்ட அளவிற்கு மேல் செல்லமாட்டார்கள். ஆனால் எங்களுடைய தமிழ்த் தரப்புக்கள் பலமாக இருக்கின்ற காலங்களிலே அது சம்மந்தமாக தீவிரமாகக் கதைப்பார்கள். ஆனால் நாங்கள் பலவீனமாக இருக்கின்ற போது அதுவும் பலவினமாகவே போகும்.

இருந்தாலும் எங்களுடைய முயற்சிகளை நாங்கள் கைவிட்டு விட முடியாது. இது ஒன்றுமே சரிவராது என்ற அபிப்பிராயம் பலர் மத்தியில் இருந்தாலும் சரிவராது என்று சொல்லி நாங்கள் கைவிட்டு விட முடியாது.

நாங்கள் எங்களுடைய முயற்சிகளைத் தொடர வேண்டும். அவ்வாறு முயற்சிகளைத் தொடருவதன் மூலம் தான் சில விசயங்களைநாங்கள் அடைய முடியுமென்று நான் நம்புகின்றேன்.

அதன் காரணமாகத் தான் நாங்கள் இந்த முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றோம். ஆனால் இன்றிருக்கின்ற நிலைமையிலே நூற்றியம்பது வாக்குகளை எடுப்பது மிகவும் கஸ்ரம். அது மாத்திரம் அல்லாமல் மிகவும் குழப்பகரமானதொரு சுழ் நிலைமை இருக்கின்றது.

ஐனாதிபதிக்கும் பிரைதமருக்கும் இருக்க கூடிய முறுகல் நிலை. இவைகள் எல்லாம் தீர்வை நோக்கிய எங்கள் பயணத்தை மிக மிக தடைப்படுத்திக் கொண்டு இருக்குமென்று தான் நினைக்கின்றேன் என்றார்.
Previous Post Next Post