வெள்ளம் புகுந்த கிணறுகள் துப்பரவுப் பணி - Yarl Thinakkural

வெள்ளம் புகுந்த கிணறுகள் துப்பரவுப் பணி

கனடா உறங்கா விழிகள் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையுடன் கிளிநொச்சி முல்லைத்தீவுப் பகுதியில் வெள்ள அனர்த்தத்தால் மாசடைந்த கிணறுகள் துப்பரவு செய்து மக்களுக்கு கையளிக்கும் பணி நடைபெற்றுவருகின்றது. 

குறித்த பணியில் கிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோர் சங்கமும் கிறீன் பியூச்சர் நேசன் பவுண்டேசனுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றது.

 அவ்வகையில் கண்டாவளை பிரதேச செலலக்திற்குட்பட்ட கட்டைக்காடு பெரியகுளம் பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்படைந்த கிணறுகள் இன்று புதன்கிழமை (02.01.2019) துப்பரவு செய்யப்பட்டு குளோறின் இடப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டன. 

இப் பணிகளில் கிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோர் சங்க தலைவர் உமாக்காந்தன் மற்றும்  கிறீன் பியூச்சர் நேசன் பவுண்டேசன் அமைப்பாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் இணைந்து ஈடுபட்டிருந்தார். 

குறித்த பணிகளை மேற்கொள்ளுவதற்கான நிதியுதவி கனடாவிலுள்ள உறங்கா விழிகள் தொண்டு நிறுவனத்தினால் கிறீன் பியூச்சர் நேசன் பவுண்டேசனன் ஊடாக வழங்கப்படிருந்தது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post