பல்கலைக்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு! - Yarl Thinakkural

பல்கலைக்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு!

உயர் தரப் பரீட்சையில் கடந்தாண்டு அதி சிறப்பு புள்ளிகள் பெற்று பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு ஒன்றை இன்று வியாழக்கிழமை யாழ் இராணுவ தலைமையகம் ஏற்பாடு செய்திருந்தது.

யாழ் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராட்சி தலைமையில் பலாலி இராணுவ தலைமையகத்தில் காலை 10 மணிக்கு இடம்பெற்றது.

இதில் 30 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். இந் நிகழ்வில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான  கண்பார்வையற்ற விசேட தேவையுடைய இரண்டு மாணவர்களும் மூன்று வருடங்களுக்கு மாதம் 5000 ரூபாய் வீதம் வழங்கும் புலமைப் பசில் வழங்கி ஆரம்பித்து வைக்கப்பட்டது.




Previous Post Next Post