இந்திய மீனவர் சாவு! -உண்மையை மறைக்க முயற்சி- - Yarl Thinakkural

இந்திய மீனவர் சாவு! -உண்மையை மறைக்க முயற்சி-

நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து இந்திய மீனவர் படகு மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் மீனவர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

உயிரிழந்த மீனவரின் சடலம் கடலில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் மல்லாகம் நீதவானின் உத்தரவுக்க அமைய யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வைத்திய சாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த குறித்த சடலத்தை உயிரிழந்தவரின் படகில் வந்த நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் இன்று திங்கட்கிழமை பார்வையிட்டு அடையாளப்படுத்தியிருந்தனர்.

குறித்த மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் அல்லது காயமடைந்த நிலையில் கடற்படை முகாம் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

மீனவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் தொடர்பில் கடற்படையினர் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. அதேவேளை மீனவர்களுக்கு எவ்வாறு காயம் ஏற்பட்டது எனும் தகவல்கள் தெரியவரவில்லை.

குறித்த இந்திய மீனவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பான தகவல்களை யாழ்.போதனா வைத்திய சாலை மட்டங்களும் வெளிப்படுத்த மறுத்து வருகின்றது.

இந்நிலையில் இந்திய மீனவர் கடலில் மூழ்கி இறந்தாரா? அல்லது கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு இறந்தாரா? என்ற தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
Previous Post Next Post