வடக்குக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்!  - Yarl Thinakkural

வடக்குக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்! 

வடக்கு, சப்ரகமுவ, ஊவா ஆகிய மூன்று மாகாணங்களுக்குப் புதிய ஆளுநர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அதன் பிரகாரம் வடக்கு மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவனும், சப்ரகமுவ மாகாண ஆளுநராக சிரேஷ்ட பேராசிரியர் தம்ம திஸாநாயக்கவும், ஊவா மாகாண ஆளுநராக கீர்த்தி தென்னக்கோனும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் மூவரும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். 

இதேவேளை, தென் மாகாணத்துக்கு ஆளுநராக இதுவரையில் எவரும் நியமிக்கப்படவில்லை.
வடக்குக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்! 


Previous Post Next Post