வடக்கு ஆளுநர் கிளிநொச்சி விஜயம்! - Yarl Thinakkural

வடக்கு ஆளுநர் கிளிநொச்சி விஜயம்!

வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று காலை கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டார்.

கிளிநொச்சி அரசாங்க அதிபர் பணிமனைக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநரை அரசாங்க அதிபர் உள்ளிட்ட ஊழியர்கள் வரவேற்றனர்.

நேற்று உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட சுரேன் ராகவன் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பதோடு, இதன்போது கிளிநொச்சி மாவட்ட நிலைமைகள் தொடர்பிலும் அரச அதிகாரிகளுடன் ஆராய்ந்தார்.

இதில் முக்கியமாக கிளிநொச்சியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் பின்னரான நிலைமகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்ததுடன் கிளிநொச்சி மாவட்டத்தின் ஏனைய பல விடயங்கள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.

குறித்த விஜயத்தில் ஆளுநருடைய செயலாளர் எல்.இளங்கோவன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post