வலி.வடக்கில் மக்கள் காணியை ஆக்கிரமித்து புத்த விகாரை! - Yarl Thinakkural

வலி.வடக்கில் மக்கள் காணியை ஆக்கிரமித்து புத்த விகாரை!

வலி.வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த பகுதிகளில் மக்களின் ஆதனங்களை அழித்து அங்கு புத்த விகாரகளை அமைத்து இராணுத்தினர் தமது வழிபாடுகளை மேற்கொண்டு வந்துள்ளமை மக்களை விசனமடையச் செய்துள்ளது.

கடந்த 28 ஆண்டுகளாக இராணுவத்தின் ஆக்கரமிப்பில் இருந்த வலி.வடக்கில் இருந்து தையிட்டி வடக்கு மற்றும் தெற்கு ஆகிய பகுதிகள் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக நேற்று செவ்வாக்கிழமை உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

இதன்படி விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிடுவதற்கும் நேற்றைய தினம் இராணுவத்தால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

குhணகளை பார்வையிடுவதற்கு சென்ற மக்கள் அங்கு பெரும்பாலன வீடுகள் இராணுவத்தால் சேதப்படுத்தப்படாமல் பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளதை பார்த்து ஆணந்தமடைந்தனர்.

இருப்பினும் மக்கள் குடிமனைகளுக்கு மத்தியில் தனியார் காணி ஒன்றினை ஆக்கிரமித்து பெரிய புத்த விகாரை ஒன்றினை அமைத்து தமது வழிபாடுகளை மேற்கொண்டு வந்துள்ளமை காணிகளை பார்வையிட சென்ற மக்கள் முகம் சுழிக்க வைத்திருந்தது.

மேலும் மக்களின் வீடுகளை தமது எண்ணத்திற்கு உடைத்து. இராணுவ முகாம் அமைப்புத் தேவைகளுக்காக மாற்றி நிர்மாணங்களை மேற்கொண்டமை, மற்றும் காணிகளின் எல்லைகளில் உள்ள மதில்களை அடியோடு அழித்து இவ்வாறான புத்த விகாரைகளை அமைதுள்ளமை மக்கள் சினம் கொள்ள வைத்திருந்தது.

காணிகளை மக்கள் பார்வையிட வருவதை அவதானித்த இராணுவத்தினர் அங்கிருந்த புத்த விகாரையில் இருந்த புத்தருடைய சிலையினை அங்கு வந்த இராணுவத்தினர் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
Previous Post Next Post