இ.போ.ச சேவைகள்- வடக்கில் முடக்கம்! - Yarl Thinakkural

இ.போ.ச சேவைகள்- வடக்கில் முடக்கம்!

வடக்கு மாகாணத்தில் உள்ள 7 சாலைகளின் இலங்கை போக்குவரத்து சபை சாலை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று வெள்ளிக்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நிர்வாகத் திறமையற்ற வடமாகாண பிராந்திய முகாமையாளரால் வடபிராந்திய சாலைகள் இழுத்து மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் இயங்கி வருகின்றது.

ஏற்கனவே எழுத்து மூலம் உயர் பீடங்களுக்கு அறிவித்த குற்றச்சாட்டுகளுக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறாத காரணத்தினால் வடபிராந்திய தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்துடனும் கவலையுடனும் பணியாற்றி வருகின்றோம்.

இதுவரை பொதுமக்களுக்கு சேவைகள் பாதிக்கப்படாத வகையில் இரு போராட்டங்களை வடபிராந்திய முகாமையாளருக்கு எதிராக மேற்கொண்டிருந்தோம். இன்று வரை தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை.

இதனால் வேறு வழியின்றி வடபிராந்திய தொழிலாளர்கள் எமது நன்மையினை கருதி வடபிராந்திய முகாமையாளரிரை வடக்கிலிருந்து வெளியேற்றுமாறு தெரிவித்து இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளோம் என்று இ.போ.ச ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக போக்குவரத்து செய்வதில் பொது மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றார்கள். அத்துடன் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் பருவ கால சீட்டுடன் வந்தும் நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் காத்திருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
Previous Post Next Post