பாராளுமன்றில் குழப்பம்! -அறிக்கை நாளை மறுதினம்- - Yarl Thinakkural

பாராளுமன்றில் குழப்பம்! -அறிக்கை நாளை மறுதினம்-

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் குழப்பநிலை தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பாராளுமன்ற குழுவின் அறிக்கை நாளை மறுதினம் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படும் என அக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

குழுவின் விசாரணை நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாகவும் பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கை அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக சபாநாயகரினால் சட்ட மா அதிபருக்கு கையளிக்கப்படும் எனவும் சட்ட மா அதிபரிடம் கையளிப்பதற்கு முன்னர் அது தொடர்பிலான பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் எனவும் பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 14, 15, 16ம் திகதிகளில் பாராளுமன்றத்தில் குழப்பநிலை ஏற்பட்டதுடன் குறித்த பிரச்சினைகள் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் காயங்களுக்குள்ளானதுடன் பாராளுமன்ற சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டிருந்தன.

இதேவேளை குறித்த பிரச்சினைகள் தொடர்பிலான பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post