9 வயதுச் சிறுமி கொலை! -தாய் உள்ளிட்ட இருவர் கைது- - Yarl Thinakkural

9 வயதுச் சிறுமி கொலை! -தாய் உள்ளிட்ட இருவர் கைது-

9 வயதுச் சிறுமி ஒருவரை கொலை செய்து புதைத்ததாகச் சந்தேகப்படும் தாய் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதுளை ஹாலிஎல – கன்தேகெதர சார்ணியா தோட்டம் மஹதென்ன பிரிவில் சிறுமியொருவர் அவரின் வீட்டுக்கு அருகில் மரக்கறித் தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார் என்று பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

வவுனியா செட்டிக்குளத்தைச் சேர்ந்த குறித்த சிறுமியின் தாய் அவரது கணவனைப் பிரிந்து பிறிதொரு நபருடன் ஹாலிஎலப் பகுதியில் வசிந்து வந்துள்ளார்.

குறித்த சிறுமியின் உயிரிழப்புத் தொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த வருடம் ஜனவரி மாதம் குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றதாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Previous Post Next Post