7,420 லீற்றல் எதனோல் போதை பொருள் யாழில் மடக்கிப் பிடிப்பு! - Yarl Thinakkural

7,420 லீற்றல் எதனோல் போதை பொருள் யாழில் மடக்கிப் பிடிப்பு!

யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு பனம் சாரயத்தை தருவித்து விநியோகிக்கும் சுன்னாகம் மதுபானக் கடை உரிமையாளர் ஒருவருக்கு எடுத்து வரப்பட்ட சுமார் 7 ஆயிரத்து 500 லீற்றர் எதனோல் (தூய மதுசாரம்) கைப்பற்றப்பட்டுள்ளது என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

தென்னிலங்கையிலிருந்து பாரவூர்தியில் ஒன்றில் எடுத்துவரப்பட்ட 20 லீற்றர் கொள்ளவுடைய 371 கான்களே கைப்பற்றப்பட்டது. அதனை எடுத்து வந்த பாரவூர்திச் சாரதி மற்றும் அவரது உதவியாளர் இருவரும் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு விநியோகிக்கப்படும் பனம் சாரயத்துக்கு கலப்படம்  செய்வதற்காகவே இந்தப் பெரும் தொகை எதனோல் மதுபானக் கடை உரிமையாளரால் எடுத்துவரப்பட்டது என்று ஆரம்ப விசாரணைகளில் மூலம் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

1 லீற்றர் எதனோலில் சுமார் 100 சாராயப் போர்த்தல்களுக்கு கலப்படம் செய்வதால்,   மதுபானக் கடை உரிமையாளருக்கு பல கோடி ரூபா லாபம் கடைப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

வடக்கில் இந்தப் பெரும் தொகை எதனோல் மீட்கப்பட்டது இதுவே முதன்முறை என்று சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

எதனோல்  என அழைக்கப்படும் தூய மதுசாரம் ஒரு கிளர்ச்சியை அல்லது போதையை ஏற்படுத்தும். அத்துடன், மதுசாரயத்துக்கு அடிமையாக்கும் பழக்கும் பொருளாகவும் காணப்படும் எதனோல் நச்சுத் தன்மையானது. அத்துடன், குறிப்பிட்ட அளவைவிட எதனோல் அதிகரித்தால் அந்த சாரயத்தை பருகுவோரின் உடன்நிலை மிகக் கடுமையாகப் பாதிக்கும் என ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post