70 மாணவர்களை கொட்டிய குளவி கூட்டம்! -3 பேர் ஆபத்தான நிலையில்- - Yarl Thinakkural

70 மாணவர்களை கொட்டிய குளவி கூட்டம்! -3 பேர் ஆபத்தான நிலையில்-

பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில், குளவிக் கூடொன்று கலைந்து மாணவர்களை கொட்டத் தொடங்கியதால் 70 பேர், தெமோதரை, பண்டாரவளை, பதுளை ஆகிய இடங்களிலுள்ள வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


பள்ளக்கட்டுவை சுகதா கனிஸ்ட வித்தியாலய மைதானத்தில் இன்று வியாழக்கிழமை இல்ல விளையாட்டுப் போட்டி இடம்பெற்றது.

இப்போட்டியின் போதே, மைதான அருகேயுள்ள மரத்திலிருந்து குளவிக்கூடு கலைந்து, போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளையும், பார்வையாளர்களையும் கொட்டியுள்ளது.

இவர்கள் உடனடியாக, அங்கிருந்த வாகனங்களில் ஏற்றி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதையடுத்து, இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.

பதுளை அரசினர் மருத்துவமனையில் 16 மாணவ, மாணவிகளும், பண்டாரவளை அரசினர் மருத்துவமனையில் 30 மாணவ, மாணவிகளும், தெமோதரை அரசினர் மருத்துவமனையில் 24 மாணவ, மாணவிகளுமாக 70 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எல்ல பொலிசார் மேற்படி சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 16 மாணவ மாணவிகளில் 3 பேர் ஆபத்தான நிலையிலுள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
Previous Post Next Post