யாழில் 68 கிலோ கஞ்சா மீட்பு! - Yarl Thinakkural

யாழில் 68 கிலோ கஞ்சா மீட்பு!

68  கிலோ கஞ்சாவை பருத்தித்துறைப் பொலிஸார் சற்றுமுன்னர் மீட்டனர்.

பருத்தித்துறைப் பகுதியில் வெற்றுக் காணி ஒன்றில் வெயிலில் காயவிடப்பட்டிருந்த கஞ்சா குறித்த தகவல் கடற்படையினரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்டது.

அதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் கஞ்சா மீட்டனர். குறித்த காணியின் உரிமையாளர் எனக் கூறப்படும் நபர் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous Post Next Post