6 பேர் சுட்டுக்கொலை! -இருவருக்கு தூக்கு- - Yarl Thinakkural

6 பேர் சுட்டுக்கொலை! -இருவருக்கு தூக்கு-

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் 6 பேரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இரண்டு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த மிகல் ஜூலிகே பிரசன்ன பெரேரா மற்றும் சம்பர் பெர்னாண்டோ ஆகிய இருவருக்கே தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1999ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வாகனம் ஒன்றுக்குள் 6 பேரை சுட்டுக் கொலை செய்தமை மற்றும் அதற்கு சதித்திட்டம் தீட்டியதாக நால்வருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நீண்ட விசாரணைகளின் பின்னர் மிகல் ஜூலிகே பிரசன்ன பெரேரா மற்றும் சம்பர் பெர்னாண்டோ ஆகிய இருவரையும் நீதிபதி கிஹான் குலதுங்க குற்றவாளிகளாக அறிவித்து தீர்ப்பளித்தார்.

அதன்படி இருவருக்கும் மதூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி ஏனைய இருவரையும் குற்றமற்றவர்களாக விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
Previous Post Next Post