47 மாடி ஏறிய ‘பிரான்ஸ் ஸ்பைடர் மேன்’ - Yarl Thinakkural

47 மாடி ஏறிய ‘பிரான்ஸ் ஸ்பைடர் மேன்’

உலகில் மனிதனாய் பிறந்த அனைவருக்கும் தங்களுக்கு என்ற தனித்திறமை இருக்கும். சிலர் அந்த திறமையை வெளிப்படுத்துகின்றனர், இன்னும் சிலர் அது வெளிப்படுத்துவதில்லை. ஆனால், நாம் அனைவரின் மனதிலும் ஆங்கில திரைப்படங்களில் வருகின்ற அட்டகாசமான திறைமைகளை உடைய நிறைய கதா நாயகர்கள் மனதில் வைத்திருப்போம்.

குறிப்பாக, ஹல்க், சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், ஐயன் மேன் ஆகிய கதா பத்திரங்கள் அனைத்தும் நீங்கா இடத்தை பெற்றிருக்கும்.

நாம் அனைவரும் இது போன்ற ஒரு சக்தி நமக்கும் கிடைக்காதா என ஏங்கியதும் உண்டு. இது போன்ற தனித்திறைமையை கொண்ட ஒரு மனிதன் 47 மாடி உயர கட்டடத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 47 மாடிக் கட்டடத்தில் வெளிப்புறச் சுவர் வழியாக ஏறிச்சென்று பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 56 வயதுடைய சிலந்தி மனிதர் அலைன் ராபர்ட் சாதனை படைத்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அலைன் ராபர்ட் தனது 11 வயதில் இருந்தே உயரமான கட்டடங்களில் வெளிப்புறச் சுவர் வழியாக ஏறிச் செல்வதைப் பொழுதுபோக்காச் செய்திருக்கிறார்.

இவ்வாறு 1999 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள சியர்ஸ் டவர் என்னும் கட்டடத்தில் ஏறிச் சாதனை படைத்தபோது அவருக்கு பிரெஞ்ச் சிலந்தி மனிதன் என்னும் பட்டப் பெயர் வழங்கப்பட்டது. ஈபில் கோபுரம், சிட்னி ஓபரா, துபாயின் புர்ஜ் கலீபா உட்பட உலகம் முழுவதும் 150-க்கு மேற்பட்ட கட்டடங்களில் ஏறி அவர் சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், உரிய அனுமதி இல்லாமல் பிலிப்பைன்சின் மணிலாவில் 47 மாடிக் கட்டடத்தில் வெளிப்புறச் சுவர் வழியாக உச்சிக்கு ஏறிச் சென்று சாதனைபடைத்த அவரைக் காவல்துறையினர் முறைப்படி கைது செய்தனர்.
Previous Post Next Post