45 இலட்சம் அமெரிக்கடலரில் கே.கே.எஸ் துறைமுகம் அபிவிருத்தி! - Yarl Thinakkural

45 இலட்சம் அமெரிக்கடலரில் கே.கே.எஸ் துறைமுகம் அபிவிருத்தி!

யாழ். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி காங்கேசன்துறை வரவுள்ளார் என்று அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை துறைமுகம் 2021ஆம் ஆண்டளவில் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடிய கப்பல் சேவையை கொண்ட துறைமுகமாக மாற்றப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தியாவிடம் இருந்து சலுகை அடிப்படையில் கிடைத்த நான்கு கோடி 50 இலட்சம் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்தி அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது.

அபிவிருத்தி வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி காங்கேசன்துறை செல்லவுள்ளார்.

காங்கேசன்துறை துறைமுகம் தற்சமயம் இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. புதிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், புதிய வாயில் ஒன்று அமைக்கப்படவுள்ளது எனவும் அமைச்சர் சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post