42 கிலோ கஞ்சாவுடன் யாழில் இருவர் கைது! - Yarl Thinakkural

42 கிலோ கஞ்சாவுடன் யாழில் இருவர் கைது!

யாழ். நாவாந்துறைப் பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த 42 கிலோ கஞ்சாவுடன் இருவரை கொழும்பு விசேட பொலிஸ் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

நாவாந்துறைப் பகுதியில் உள்ள வீடொன்றில் விற்பனைக்காக வைத்திருந்தபோதே குறித்த கஞ்சா தொகையைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், நேற்றிரவு 7 மணியளவில் குறித்த வீட்டை சுற்றிவளைத்தபோது சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் கைப்பற்றப்பட்ட கஞ்சாப் பொதிகள் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான விசாரணையை கொழும்பு விசேட பொலிஸ் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post