படைப் புழுத் தாக்கம்! -35 கோடி வருமான இழப்பு, 32,000 ஏக்கர் செய்கை நாசம்- - Yarl Thinakkural

படைப் புழுத் தாக்கம்! -35 கோடி வருமான இழப்பு, 32,000 ஏக்கர் செய்கை நாசம்-

வடக்கில் படைப் புழுவின் தாக்கத்தால் 32 ஆயிரத்தி 253 ஏக்கர் பயிற்செய்கை பாதிக்கப்பட்டுள்ள அதே வேளை இப் பாதிப்பால் 35 கோடியே 52 இலட்சத்தி 2 ஆயிரத்து 300 ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்று புள்ளிவிபரங்கள் தொரிவிக்கின்றன.

தென்னிலங்கையில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்திய படைப் புழு தற்போது வடக்கிலும் தாக்குத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை காலமும் இல்லாத இத் தாக்கம் வடக்கு விவசாயிகளை அச்சமடைய வைத்துள்ளது.

வடக்கினை தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் படைப் புழு சோளச் செய்கைக்கு பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தாலும், வடக்கில் சோளச் செய்கையினை தாண்டி நிலக்கடளை, உழுந்து, இறுக்கு மற்றும் கௌப்பி போன்ற செய்கைக்கும் பெரிதும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் 2.5 ஏக்கர் கௌப்பி செய்கை படைப்புழுவின் தாக்கத்திற்கு உள்ளாகி அழிவடைந்துள்ளது. மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2.5 ஏக்கர் இறுக்கு செய்கையும், 2 ஏக்கர் உழுந்து செய்கை மற்றும் ஒரு ஏக்கர் நிலக்கடலையும் படைப்புழுவின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது.

வடக்கு மாகாணத்தில் படைப் புழுவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் 16.5 ஏக்கர் 100 வீத அழிவுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் 3 கோடியே 63 இலட்சம் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் யாழ்.மாவட்டத்தில் 50 ஏக்கரும், வவுனியா மாவட்டத்தில் 13 ஏக்கருமாக மொத்தம் 63 ஏக்கர் 75 வீத அழிக்கு உள்ளாகியுள்ளது. இதனால் 10 கோடியே 3 இலட்சத்தின 95 ஆயிரம் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் யாழ்ப்பாணத்தில் 1.95 ஏக்கரும், கிளிநொச்சியில் 20 ஏக்கரும், முல்லைத்தீவில் 56.25 ஏக்கரும், மன்னாரில் 18.13 ஏக்கரும், வவுனியாவில் 51.5 ஏக்கருமாக மொத்தம் 147.83 ஏக்கர் 50 வீத அழிவுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் 16 கோடியே 2இலட்சத்தி 61 ஆயிரத்து 300 ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதே போன்று யாழ்ப்பாணத்தில் 1.2 ஏக்கரும், கிளிநொச்சியில் 8.75 ஏக்கரும் முல்லைத்தீவில் 12.5 ஏக்கரும், வவுனியாவில் 72.75 ஏக்கருமாக மொத்தமாக 95.2 ஏக்கர் 25 வீத அழிவுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் 5 கோடியே 23 இலட்சத்தி 6 ஆயிரம் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அப் புள்ளிவிபரங்கள் ஊடாக தகவல் அறிய முடிகின்றது.
Previous Post Next Post