யாழ்.பல்கலையின் 34வது பட்டமளிப்பு விழா! - Yarl Thinakkural

யாழ்.பல்கலையின் 34வது பட்டமளிப்பு விழா!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34 ஆவது பொதுப்பட்டமளிப்பு வைபவத்தின் முதலாம் பகுதி இன்று செவ்வாய்கிழமை  பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில்  4, அமர்வுகளாக நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர்.எஸ்.பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகவுள்ள இந்த நிகழ்வில் அவர்  பட்டங்களையும், தகமைச்சான்றிதழ்களையும், பரிசில்களையும் வழங்கிவைத்தனர். 

இப் பட்டமளிப்பு வைபவத்தில் கலைப்பீடம் (பகுதி), பிரயோக விஞ்ஞான பீடம், வியாபாரகற்கைகள் பீடம்,முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிகபீடம்(பகுதி),விவசாய பீடம், பொறியியல் பீடம், உயர் பட்டப்  படிப்புகள் பீடம், மற்றும் சித்த மருத்துவ பிரிவைச் சேர்ந்த 459 பட்டதாரிகளும், 156 டிப்ளோமாதாரிகளுமாக மொத்தம் 615பட்டதாரிகள் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

முதலாம் அமர்வுகாலை 9.00 -10.00 , 2ம் அமர்வு-10.30-11.30, 3ம் அமர்வு-நண்பகல் 12.00 -1.00, 4ம் அமர்வு பிற்பகல் 2.00-3.00 மணி வரை நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு கலாசார நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட பொறியியல் பீடத்தின் 48 பட்டதாரிகள் பொறியியல் விஞ்ஞானமாணிப் பட்டம் பெற்று 2ம் அணியாக வெளியேறுகின்றார்கள். இவற்றுடன் இப்பட்டமளிப்பு விழாவில் எல்லாப்பட்டகற்கை நெறிகளுக்குமாக 13 தங்கப்பதக்கங்களும,; 4 பரிசில்களும்;, வழங்கப்பட இருக்கின்றன.
Previous Post Next Post