கொக்கட்டிச்சோலை படுகொலை! -32ஆவது நினைவேந்தல்- - Yarl Thinakkural

கொக்கட்டிச்சோலை படுகொலை! -32ஆவது நினைவேந்தல்-

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுதூபியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இதன்போது, உயிரிழந்த மக்களுக்கு நினைவுச்சுடரேற்றி மலர்தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1987 ஆம் ஆண்டு இன்றைய நாளில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவாக வருடாந்தம் குறித்த நினைவுத் தூபியில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.


Previous Post Next Post