விஜய் மகன் சஞ்சய் துப்பாக்கி 2 வில்! - Yarl Thinakkural

விஜய் மகன் சஞ்சய் துப்பாக்கி 2 வில்!

ஏ.ஆர்.முருகதாஸ் ரூ விஜய் கூட்டணியில் உருவான முதல் படம் ‘துப்பாக்கி’. இந்தப் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் சில நாட்களாக ‘துப்பாக்கி 2’ படம் குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

‘சர்க்கார்’ படத்தை அடுத்து மீண்டும் ஒரு படத்தில் விஜய்யும் ஏ.ஆர்.முருகதாஸ{ம் இணையவுள்ளதாகவும்  அந்த படம் துப்பாக்கி 2’ படமாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் விஜய் தற்போது ‘தளபதி 63’ படத்திலும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ரஜினி படத்திலும் பிசியாக இருப்பதால் இப்போதைக்கு விஜய் ரூ -முருகதாஸ் கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை.

இந்த நிலையில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், ரஜினி படத்தை முடித்தவுடன் அடுத்ததாக ‘துப்பாக்கி 2’ வை கையிலெடுக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு பதிலாக அவரது மகன் சஞ்சய்யை ஹீரோவாக நடிக்க வைக்க ஒரு ஐடியா ஒன்று உள்ளதாக இயக்குனர் தரப்பு தெரிவிக்கின்றன.

இந்த செய்தி உண்மையா? அல்லது வதந்தியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Previous Post Next Post