குரங்குக்கு பாலியல் தொல்லை! 25 வயது பெண்ணுக்கு 3 வருட சிறை ! - Yarl Thinakkural

குரங்குக்கு பாலியல் தொல்லை! 25 வயது பெண்ணுக்கு 3 வருட சிறை !

எகிப்தில் குரங்கு ஒன்றிற்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண்ணுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எகிப்து நாட்டில் நைல் டெல்டா நகரில் செல்லப்பிராணிகளை விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது.

அங்கு கடந்த அக்டோபர் மாதம் பஸ்மா என்ற 25 வயது பெண் சென்றிருந்தார்.

கடையில் இருந்த குரங்கு ஒன்றுடன் விளையாடிய பஸ்மா, அப்போது அதன் பிறப்புறுப்பைச் சீண்டி செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனை அங்கிருந்த ஒருவர், பஸ்மாவிற்குத் தெரியாமல் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

90 விநாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அதனைத் தொடர்ந்து குரங்குக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, போலீசார் பஸ்மாவைக் கைது செய்தனர். அவர் மீது மன்சூரா நகர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது அவர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், பஸ்மாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Previous Post Next Post