மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 19 வது ஆண்டு நினைவு தினம் - Yarl Thinakkural

 மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 19 வது ஆண்டு நினைவு தினம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமை செயலகத்தில் மாமனிதர் குமார் பொன்னம்பலம் 19வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 

இன்று (05.01.2018) பிற்பகல் 04 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் புதல்வருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமயில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர்  மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 

தொடர்ந்து கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மலரஞ்சலி சொலுத்தினர். அதனைத் தொடர்ந்து  மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் ஞாபகார்த்த உரைகள் இடம்பெற்றன.
Previous Post Next Post