16 வயது சிறுவன் கொடூரமாக அடித்துக் கொலை! - Yarl Thinakkural

16 வயது சிறுவன் கொடூரமாக அடித்துக் கொலை!

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய சனூஸ்தீன் முகம்மட் சகீர் எனும் சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (16) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 

அதே பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களாலேயே, மீராவோடை ஆற்றங்கரைப் பகுதியில் வைத்து மேற்படி சிறுவன் காட்டுமிராண்டித்தனமாக அடித்தும் கூரிய ஆயுதத்தால் குத்தியும் கொலைசெய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுவனைத் தாக்கிய இரு இளைஞர்களும், அவரை ஓட்டோவில் ஏற்றிக்கொண்டு வாழைச்சேனை வைத்தியசாலையில் சேர்த்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

சிறுவனின் சடலம், பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்த வாழைச்சேனைப் பொலிஸார், தப்பியோடிய இளைஞர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post