தீயாக பரவும் கிம் கர்தாசியன் படம்! - Yarl Thinakkural

தீயாக பரவும் கிம் கர்தாசியன் படம்!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மாடல் கிம் கர்தாசியன்(38). இவர் தொலைக்காட்சி நடிகையாகவும்  தொழில் அதிபராகவும் பல்வேறு முகங்களைக் கொண்டுள்ளார். தன்னுடைய சமூக வாழ்க்கைக்காக ”கீப்பிங் அப் வித் தி கர்தாசியன்ஸ்” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மிகவும் கவர்ச்சிகரமான ஆடை அணிந்து கிம் கர்தாசியன் காட்சியளிக்கிறார்.

இந்த ஆடை உடல் அங்கங்களை அப்படியே வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் அமைந்துள்ளது. இதன் விலை ரூ.4 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இப்படியொரு ஆடையை அணிந்து போஸ் கொடுத்ததற்கு ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் மாடல் அழகியான கிம் கர்தாசியன், இவற்றை ஒரு பொருட்டாக கூட கருதவில்லை.

இதேபோல் ஆடை விஷயத்தில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறார். சமீபத்தில் நடந்த 2018 பீப்பிள் சாய்ஸ் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் ஜீன் பால் கௌல்டியர் ஆடையை அணிந்து மிகவும் கவர்ச்சியாக காட்சியளித்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நியூயார்க் பேஷன் வீக்கில் உள்ளாடை இல்லாத ஆடையை அணிந்து வந்துஇ பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
Previous Post Next Post