இலங்கையில் திடீர் குளிர் காற்று! - Yarl Thinakkural

இலங்கையில் திடீர் குளிர் காற்று!

இலங்கைத் தீவுக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்த பிரதேசம் மேலும் வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் தீவின் பெரும்பாலான பகுதியில் மிகுந்த மழையுடனான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக குளிர்ந்த காலநிலை நிலவும் என்பதுடன், சில நேரங்களில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் மிகவும் வலுவான மற்றும் ஈரப்பதனான காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Previous Post Next Post