குடும்ப பெண் கொடூரமாக வெட்டிக்கொலை! - Yarl Thinakkural

குடும்ப பெண் கொடூரமாக வெட்டிக்கொலை!

திவுலுபிட்டிய, மரதகஹமுல பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

42 வயதுடைய திலூஷ சஞ்சீவனி லிவோரா எனும் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவருடைய கணவர் வீட்டில் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்ணின் கணவர் நீர்கொழும்பு சென்று வீட்டுக்குத் திரும்பி வந்தபோது வீட்டின் பின் கதவு திருக்கப்பட்டிருந்ததால் வீட்டுக்குள் நுழைந்த அவர், வீட்டின் அறைக்குள் அவருடைய மனைவி கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருப்பதை அவதானித்துள்ளார்.

பெண்ணின் கழுத்து மற்றும் கால் பகுதிகளில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் கொலைசெய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் இதுவரையில் யாரும் கைதுசெய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் திவுலுபிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post