கோஸ்ரி மோதலுக்கு தயாரில் இருந்த குழு! -பொலிஸாரால் மடக்கிப்பிடிப்பு- - Yarl Thinakkural

கோஸ்ரி மோதலுக்கு தயாரில் இருந்த குழு! -பொலிஸாரால் மடக்கிப்பிடிப்பு-

பளைப் பகுதியில் குழுவை மோதலைத் ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருந்த குழுவொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துப் பிடித்துள்ளனர்.
இச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சுற்றிவளைப்பில் ஒருவர் வாளுடன் தப்பித்த நிலையில் இருவரை வாள்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு 10 மணியளவில் எழுதுமட்டுவாள்ப் பகுதிக் குழு ஒன்றுக்கும் பளைப் பகுதியைச் சேர்ந்த குழுவொன்றுக்கும் கைகலப்பு இடம்பெற்றது, இதனையடுத்து பளை யைச் சேர்ந்த குழு நல்லிரவில் எழுதுமட்டுவாள் குழுவை  வாள்களை சகிதம் சென்று தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது என்று பளைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியைச் சுற்றி வளைத்தனர்.

இதன் போது இருவர் வாள்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், குறித்த சந்தேக நபர்களை கிளிநொச்சி மாவட்ட  நீதிமன்றத்தில் இன்று  முற்படுத்துவற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
Previous Post Next Post