மதுபான சாலையை அகற்று! -பருத்திதுறையில் போராட்டம்- - Yarl Thinakkural

மதுபான சாலையை அகற்று! -பருத்திதுறையில் போராட்டம்-

பருத்தித்துறை நகல சபை எல்லைக்குள் உள்ள மதுபான சாலையின் அனுமதியினை இரத்து செய்யக் கோரி அப்பகுதி பொது மக்கள் கனவயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இப் போராட்டம் இன்று வியாழக்கிழமை காலை பருத்தித்துறை பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள மதுபானசாலை வியாபார உரிமையோ, கட்டட உரிமையோ இல்லாமல் சட்டவிரோதமான முறையில் மதவழிபாட்டுடிடங்களுக்கும், பாடசாலைக்கு அருகில் இயங்கி வருகின்றது.
இம் மதுபான சாலையை அகற்றக் கோரி கடந்த மே மாதம் 8 ஆம் திகதியும், ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதியும் கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது.

இப் போராட்டத்தின் முடிவில் பருத்தித்துறை நகர சபை தவிசாளருக்கு குறித்த மதுபான சாலைக்கான 2019 ஆம் ஆண்டு அனுமதி வழங்க கூடாது என்று கோரியும், நிரந்தரமான அங்கிருந்து மதுபான சாலையை அகற்றுமாறு கோரியும் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்தது.
மேலும் நகர சபை அமர்வில் அனைத்து உறுப்பினர்களும் இம்மதுபான சாலை தொடர்ந்து இயங்யுகுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தனர்.

இருப்பினும் எந்தவிதமான நடவடிக்கைகளுகம் எடுக்கப்பட்டதாக இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதனாலேயே இன்று இப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளோம் என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

Previous Post Next Post