இராணுவத்தை வீதிக்கு இறக்கு! -யாழில் பொதுஜனபரமுனவால் ஆர்ப்பாட்டம்- - Yarl Thinakkural

இராணுவத்தை வீதிக்கு இறக்கு! -யாழில் பொதுஜனபரமுனவால் ஆர்ப்பாட்டம்-

வடக்குஇ கிழக்கு தமிழ் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு இராணுவம் வீதிக்கு இறக்கப்பட வேண்டும் என்று கோரி பொதுஜனபரமுன கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பிரதான பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை காலை 9.30 மணியளவில் பொதுஜன பரமுன கட்சி ஆதரவாளர்கள் மற்றும் ஒரு சில பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளினாலேயே மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனதீவில் இரு பொலிஸார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திலேயே மக்களின் பாதுகாப்பிற்காக இராணுவம் வீதிக்கு இறக்கப்பட வேண்டும் என்ற பிரதான கோசம் முன்வைக்கப்பட்டது.

மேற்படி போராட்டத்திற்கு பின்புலமாக சிவில் உடை தரித்த இராணுவம் மற்றும் பொலிஸார் இயங்கியிருந்ததுடன்இ இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போதும் சிவில் உடை தரித்த இராணுவம் பொலிஸார் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post