திருகோணமலையில் கடற்புலிகளின் ஆயுத நூதனசாலை!  - Yarl Thinakkural

திருகோணமலையில் கடற்புலிகளின் ஆயுத நூதனசாலை! 

திருகோணமலையின் தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுதங்கள் மற்றும் சீருடைகளைக் கொண்டு நூதனசாலை அமைக்கப்பட்டுள்ளது.
இயற்கைத்துறைமுகப்பகுதியின் ஒரு பக்கத்தில் உள்ள கிழக்குப்பிராந்திய கடற்படைத்தளத்திலேயே இவ் நூதனசாலை அமைக்கப்பட்டுள்ளது. 

கிழக்கு மாகாணத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் பொரும்பாலானவர்களை ஈர்க்கும் இடமாக அந்த நூதனசாலை மாறி வருகின்றது. இவ் நூதனசாலைக்கு செல்வதற்கு முன்னனுமதி பெற வேண்டும்.    
அனுமதி பெற்று செல்பவர்களை இயற்கைத்துறைமுகப்பகுதியை படகுசவாரியில் 30 நிமிடங்கள் சுற்றிக்காட்டுவார்கள். பிறீமா நிறுவனம் , இந்திய எண்ணைக்கூட்டுத்தாபனம் , இப்படி சில இடங்களையும் தரித்து நிற்கும் பாரிய கப்பல்களையும் படகில் இருந்தவாறே பார்வையிடமுடியும்.
அதைவிட மிக முக்கியமாக கடற்புலிகளின் ஆயுதங்கள், படங்கள் , அதை தயாரித்த போராளிகள் என எல்லா விபரங்களும் போட்டுவைத்துள்ளார்கள். 

காங்கேசன்துறை இல் தற்கொலை தாக்குதலால் அழிக்கபட்ட கப்பலில் எச்சம் , அதன் படங்கள் , கிட்டு தயாரித்த ஐங்கோண வடிவிலான பாரிய கப்பல்களை தாக்கும் குண்டு என்று பல உள்ளன.Previous Post Next Post