இத்தாலி நடிகருடன் ஸ்ருதி ஹாசன்! - Yarl Thinakkural

இத்தாலி நடிகருடன் ஸ்ருதி ஹாசன்!

லண்டன் நடிகர் மைக்கேல் கோர்லேவுடன் கிறிஸ்துமஸை கொண்டாடியுள்ள ஸ்ருதி, கொண்டாட்டத்தின் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

நடிகர் கமல் நடிப்பில் உருவாகி வரும் சபாஷ் நாயுடு, பாலிவுட் இயக்குநர் மகேஷ் மஞ்ரேகரின் பெயரிடப்படாத படங்களில் நடித்து வருகின்றார். இதை தவிர தற்போது வேறு பட வாய்ப்புகள் கையில் இல்லாத நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பக்கம் அவர் கவணம் செலுத்தி வருகின்றார்.

ஸ்ருதி ஹாசனும், இத்தாலியைச் சேர்ந்த மைக்கேல் கோர்சலேவும் காதலித்து வருவதாக நெடுநாட்களாக தகவல்கள் பரவி வருகின்றது. எனினும் இதுகுறித்து இருவரும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. ஆனால் பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்துக்கொள்வது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் லண்டனில் மைக்கேல் கோர்லேவுடன் கிறிஸ்துமஸை கொண்டாடியுள்ள ஸ்ருதி, கொண்டாட்டத்தின் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

“உன்னுடன் மற்றுமொரு கிறிஸ்மஸை கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி” என குறிப்பிட்டு இந்த புகைப்படத்தினை ஸ்ருதி பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!
Previous Post Next Post