உயிராபத்திலிருந்து பாதுகாருங்கள்! -மக்கள் கோரிக்கை- - Yarl Thinakkural

உயிராபத்திலிருந்து பாதுகாருங்கள்! -மக்கள் கோரிக்கை-

கிளிநொச்சி கரடிப்போக்கு பன்னங்கண்டி வீதியில் அமைந்துள்ள பாலத்தின் இருபக்க மதகுகள் அற்றநிலையில் காணப்படுவதினால் போக்குவரத்துக்கு பொது  மக்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் என பலர்  சிரமப்படுகிறார்கள்.

கிளிநொச்சி குளத்திலிருந்து  வான்பாய்கின்ற நீரானது பன்னங்கண்டி வீதியில் அமைந்துள்ள பாலத்தினுடாகவே  மிகவும் வேகமாக செல்லும் நீரில் சிறுபிள்ளைகள் விழுந்தால் நீரில் இழுத்து செல்லும் நிலை காணப்படும்.

பன்னங்கண்டி வீதி  அமைக்கும் போது இவ் பாலத்தையும் அமை த்திருக்கவேண்டும் நீர்ப்பாசன திணைக்களத்தின் அசமந்த போக்கினால்  இவ்பாலம் அமைக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்க்கிறார்கள்.

குறித்த பாலத்துக்கு  தற்காலிகமாவது  இரும்பு கம்பிகளினாவது அமைத்துத்தந்தால் உயிராபத்திலிருந்து பாதுகாக்கமுடியும் என மக்க கோரிக்கையாக விடுக்கிறார்கள்  .
Previous Post Next Post