முல்லையில் சோகம்! -கிணற்றில் விழுந்து சிறுவன் சாவு- - Yarl Thinakkural

முல்லையில் சோகம்! -கிணற்றில் விழுந்து சிறுவன் சாவு-

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட கள்ளப்பாடு பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை சிறுவன் ஒருவன் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

தந்தை மீன்பிடி தொழிலுக்கும் தாயார் கடைக்கும் சென்றிருந்த வேளை குறித்த சிறுவன் தனது அண்ணாவுடன் வீட்டில் இருந்தவேளையிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 2015.03.17 அன்று பிறந்த 3 அகவையுடைய ரஜிதன் ரதிசன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

சிறுவனது உடலம் மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
Previous Post Next Post