மைத்திரியின் அதிரடி! -புதிய கடற்படை தளபதி நியமிப்பு- - Yarl Thinakkural

மைத்திரியின் அதிரடி! -புதிய கடற்படை தளபதி நியமிப்பு-

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் கே.ரி.பி.எச். டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று (31) காலை இதற்கான நியமனக் கடிதத்தை ரியர் அட்மிரல் கே.ரி.பி.எச். டி சில்வா பெற்றுக்கொண்டார்.

இதன் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து, ரியர் அட்மிரல் கே.ரி.பி.எச். டி சில்வா இலங்கை கடற்படையின் 23 ஆவது தளபதியாகச் செயற்படுவார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். சேனவிரட்ன மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.
Previous Post Next Post