அரசியல் கைதிகள் விடுதலை: மைத்திரி – சம்பந்தன் பேச்சு! - Yarl Thinakkural

அரசியல் கைதிகள் விடுதலை: மைத்திரி – சம்பந்தன் பேச்சு!

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் பொறிமுறை ஒன்றின் கீழ் விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே இன்று திங்கட்கிழமை மாலை நேரடிப் பேச்சு நடைபெறவுள்ளது.

தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே கடந்த வெள்ளிக்கிழமை இரவு முக்கிய சந்திப்பு நடைபெற்றது. இதன்போது அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பேச்சு நடத்த இன்று திங்கட்கிழமை வருகை தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.

அதற்கமைவாக இன்று மாலை 4 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதியுடன் சட்டமா அதிபரும் பங்கேற்பார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள்.
Previous Post Next Post