வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு ரணில் வசம்!  - Yarl Thinakkural

வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு ரணில் வசம்! 

புதிய அரசில் தேசிய கொள்கை, பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் விவகாரம் ஆகிய அமைச்சுப் பொறுப்புகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்றுமுன்னர் நடைபெற்ற அமைச்சரவைப் பதவியேற்பு நிகழ்வில் மேற்படிப் பொறுப்புக்களை பிரதமர் ஏற்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு ஆகிய விடயதானங்கள், தேசிய அரசியல் சுவாமிநாதன் வசமே இருந்தது. இம்முறை அவை கைமாற்றப்பட்டுள்ளன.

வடக்கு அபிவிருத்திக்கும் அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. அதேவேளை, சுவாமிநாதனுக்கு அமைச்சுப் பதவி வழங்குவதற்கு ஐக்கிய தேசியக்கட்சிக்குள் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.
Previous Post Next Post