பிக்பாஸ் காஜலின் கண்ணுக்கு என்ன ஆனது? - Yarl Thinakkural

பிக்பாஸ் காஜலின் கண்ணுக்கு என்ன ஆனது?

பிரபல டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர் நடிகை காஜல் பசுபதி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுதற்கு முன்பாக பல்வேறு திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானதை அடுத்து, இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன.

அதைத்தொடர்ந்து அவர் சில படங்களில் மட்டும் நடித்து வந்தார். இறுதியாக கலகலப்பு 2 படத்திலும் நடித்திருந்தார்.

எப்போதும் வெளிப்படையாக பேசும் காஜல் ரசிகர்கள் மத்தியிலும் கொஞ்சம் நல்ல பெயரை பெற்றிந்தார். அவ்வப்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் உரையாடியும் வருவார். ஆனால், கடந்த சில காலமாக சமூக வலைதளத்தில் எந்த வித பதிவையும் செய்யாமல் இருந்து வந்தார் காஜல்.

இதனை ரசிகர் ஒருவர் ஏன் என்று கேட்க அதற்கு காஜல், செல் போனை அதிகம் பயன்படுத்தியதால் கண்ணில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது கொஞ்சம் கண் பார்வையை இழந்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், சிறிது காலத்திற்கு செல்போனை அதிகம் பயன்படுத்திக்கூடாது என்று டாக்டர் கூறியுள்ளார் என்று காஜல் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post