யாழில் பொலிஸாருக்கு தண்ணி காட்டும் வாள் வெட்டு குழு! - Yarl Thinakkural

யாழில் பொலிஸாருக்கு தண்ணி காட்டும் வாள் வெட்டு குழு!

யாழில் பொலிஸாருடைய விசேட வீதி சோதனை, ரோந்து நடவடிக்கைகளையும் தாண்டி வாள் வெட்டுக் குழுக்களின் அட்டகாசம் தொடர்ந்து கொண்டே செல்கின்றது.

இன்று யாழ்.அரியாலையிலுள்ள வீடொன்றுக்குள் முகமூடி அணிந்து வாள்களுடன் நுழைந்த வாள்வெட்டுக்கும்பலொன்று வீட்டையும் வீட்டிலிருந்த பொருட்களையும் அடித்துநொருக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.

இச் சம்பவம் அரியாலை புருடி வீதியிலுள்ள தேசியசேமிப்பு வங்கிமுகாமையாளர் ஒருவரின் வீட்டிலேயே இன்று வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

குறித்த வீட்டிற்கு இன்றுஅதிகாலை 2.45மணியளவில் இரண்டுமோட்டார் சைக்கிளில்நான்கு பேர் முகமூடிகளைஅணிந்து வாள்களுடன்சென்றுள்ளனர். இதன்போது வீட்டின் முன்பாகஇருந்த மின்குமிழைஅடித்து உடைத்ததுடன்வீட்டின் முன்பக்ககதவையும்வெட்டியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அந்த வீட்டின்முன்பக்க கதவுபூட்டப்பட்டிருந்ததால்இரண்டு பேர் வாள்களுடன்வீட்டின் மதிலை பாய்ந்துஉள்ளே நுழைந்துள்ளனர்.

இவ்வாறு வாள்களுடன்உள்ளே சென்றவர்கள்வீட்டின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்ஒன்றினை முற்றாகஅடித்து உடைத்துள்ளனர்.அதனைத் தொடர்ந்துவீட்டின் ஐன்னல்கண்ணாடிகளையும்அடித்து நொருக்கியுள்ளனர்.ஆயினும் இதன் போதுவீட்டிலிருந்தவர்கள் அச்சம்காரணமாக வெளியேவரவில்லை.

இவ்வாறு கார் மற்றும்வீட்டை அடுத்து நொருக்கிஅட்டகாசத்தில் ஈடுபட்டனர்பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

இதனையடுத்தேவீட்டுக்கார்ரகள்யாழ்ப்பாணபொலிஸாருக்கு தகவல்கொடுத்ததுடன் பொலிஸ்நிலையத்தில்முறைப்பாட்டையும் பதிவுசெய்துள்ளனர்.இதனையடுத்து சம்பவஇடத்திற்கு சென்றயாழ்ப்பாண பொலிஸார்விசாரணைகளைமேற்கொண்டுவருகின்றனர். 

Previous Post Next Post