விராட் கோலி தொடர்ந்து முதல் இடத்தில்! - Yarl Thinakkural

விராட் கோலி தொடர்ந்து முதல் இடத்தில்!

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி தலைவர் கோலி 934 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகின்றார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா தற்போது விளையாடி வரும் நிலையில், இந்தய வீரர்களின் டெஸ்ட் தரவரிசையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி தொடர்ந்து முதல் இடம் வகித்து வருகின்றார்.

விராட் கோலியை தொடர்ந்து 915 புள்ளிகளுடன், நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் இரண்டாம் இடத்தில் உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசம் வெறும் 19 புள்ளிகள் மட்டுமே.

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 892 புள்ளிகளுடன் கேன் வில்லியம்சனுக்கு அடுத்த நிலையில் உள்ளார். சமீபத்தில் பந்து சேதம்செய்த புகாரில் சிக்கிய ஸ்மித் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை குறைத்துள்ளார். எனவே கேன் வில்லியம்சன் இடத்திற்கு பாதிப்பு தற்போதைக்கு ஏற்படாது என கருத்துகள் வெளியாகிறது.

அதே வேலையில் இந்திய வீரர் புஜாரா 816 புள்ளிகளுடன் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 4-ஆம் இடத்தில் உள்ளார். இவரது முன்னேற்றம் வில்லியம்சன் மற்றும் ஸ்மித்தின் இடத்தினை ஆட்டம் காணவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோலி, புஜாரை தவிர மற்றொரு இந்திய வீராரன ரஹானே 669 புள்ளிகளுடன் தொடர்ந்து 15-வது இடத்தில் உள்ளார். ராகுல் 568 புள்ளிகளுடன் 34-வது இடத்திலும், ஷிகர் தவான் 538 புள்ளிகளுடன் 43-வது இடத்திலும் உள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காமல் இருக்கும் காரணத்தால் ரோகித் ஷர்மா 499 புள்ளிகளுடன் 55-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

பந்துவீச்சினை பொறுத்தவரையில் ரவிந்திர ஜடேஜா 796 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், ரவிசந்திர அஸ்வின் 778 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமி இரண்டு இடங்கள் முன்னேறி 667 புள்ளிகளுடன் 21-வது இடம் பிடித்துள்ளார். ஜாஸ்பிரிட் பும்ரா 5 இடங்கள் முன்னேறி 591 புள்ளிகளுடன் 28-வது இடம் பிடித்துள்ளார்.
Previous Post Next Post