முட்கொம்பன் வீதி சேதம்! -போக்குவரத்து பாதிப்பு- - Yarl Thinakkural

முட்கொம்பன் வீதி சேதம்! -போக்குவரத்து பாதிப்பு-

கிளிநொச்சி பூநகரி முட்கெம்பன் - ஸ்கந்தபுரம் கொங்றிட் வீதி முழுமையாக உடைந்துள்ளதால் அப்பகுதியூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

சுமார் 2 வருடங்களுக்கு முன்னர் குறித்த வீதி புதிதான புணரமைப்புச் செய்யப்பட்டுஇ கொங்றிட் வீதியாக மாற்றப்பட்டிருந்தது.

குறித்த வீதி புணரமைப்பின் போது வெள்ள நீர் ஓடிச் செல்வதற்கான மதகும் வீதிக்கு கீழாக ஊடறுத்து அமைக்ப்பட்டிருந்தது.

உரிய நியமங்களுக்கு ஏற்ப குறித்த வீதி மற்றும் மதகு அமைக்காத காரணத்தினல் தற்போது அவ்வீதி உடைந்து வீழ்ந்துள்ளது.

வீதியில் உடைந்து காணப்படும் இடத்தில் அமைக்கப்பட்ட கொங்றிட் மற்றும்இ மதகு என்பவை உரிய முறைப்படி குறிப்பாக இரும்பு கம்பிகள் கொண்டு கொங்றிட் அமைக்காத காரணத்தினாலேயே இலகுவில் உடைந்து நாசமாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

Previous Post Next Post