வட,கிழக்கு அபிவிருத்திக்கு விசேட ஆணைக்கு! - Yarl Thinakkural

வட,கிழக்கு அபிவிருத்திக்கு விசேட ஆணைக்கு!

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதற்கு பிரதமர் உடன்பட்டு்ளளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பிரதமரிடம் யோசனைகள் முன்வைக்கப்பட்டிருப்பதுடன், ஆணைக்குழுவை அமைப்பதற்கும் பிரதமர் முன்வந்துள்ளார். பிரதமர் பதவியேற்ற பின்னர் இது தொடர்பில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்  குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து  தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post