குழப்பத்தை நீடிக்கவிடாதீர்! -மைத்திரிக்கு அமெரிக்கா அபாய எச்சரிக்கை- - Yarl Thinakkural

குழப்பத்தை நீடிக்கவிடாதீர்! -மைத்திரிக்கு அமெரிக்கா அபாய எச்சரிக்கை-

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு அரசமைப்பின் பிரகாரம் விரைவில் தீர்வுகாணப்படவேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

கண்டிக்கு இன்று திங்கட்கிழமை பயணம் மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எலைனா  டெப்பிளிட்ஸ் , அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெற்றார். இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது.

தலதாமாளிகைக்குசென்று ஆன்மீக வழிபாட்டிலும் ஈடுபட்டனர். அதன்பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி துரிதமாக அரசமைப்பின் பிரகாரம் தீர்க்கப்படவேண்டும். அந்த சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கின்றோம். அதன்பிறகே ஏனைய விடயங்கள் சம்பந்தமாக குறிப்பிடமுடியும் என்று கூறினார்.

அதேவேளை, அரசமைப்பின் பிரகாரம், அரசியல் குழப்பத்துக்கு தீர்வுகாண ஜனாதிபதி முன்வரவேண்டும் என இதற்கு முன்னரும் அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post