ஜனாதிபதிக்கு மனநோய்! -அநுரகுமார கூறுகின்றார்- - Yarl Thinakkural

ஜனாதிபதிக்கு மனநோய்! -அநுரகுமார கூறுகின்றார்-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாக – தான்தோன்றித்தனமாக எடுத்த தீர்மானத்தால் அவர் இன்று மனநோயாளியாகியுள்ளார் எனத் தெரிகின்றது.

இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்துள்ளார்.

பி.பி.சி. சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி மனநோயாளி ஆகியபடியால்தான் 225 எம்.பிக்கள் விருப்பப்பட்டாலும் பிரதமர் பதவியைத் தரமாட்டேன் என்கிறார். அவ்வாறு அவரால் சொல்ல முடியாது. அப்படியாயின் அவர் பிரதமர் பதவியை வீட்டிலிருப்பவர்களுக்கா தரப்போகின்றார்? என அநுரகுமார எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
Previous Post Next Post