தன் குழந்தைக்குச் சூடு வைத்த கொடூர தாய்! - Yarl Thinakkural

தன் குழந்தைக்குச் சூடு வைத்த கொடூர தாய்!


தனது தாயினால் இரும்புக் கரண்டியால் சுடப்பட்ட 4 வயதுடைய குழந்தை ஒன்று கண்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் குறித்த குழந்தையின் தாய் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கண்டி, அலவதுகொட பகுதியைச் சேர்ந்த 4 வயதுடைய குழந்தை தனது ஆடையில் சிறுநீர் கழித்த காரணத்திற்காக தாய் சூடு வைத்துள்ளார்.

பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பில் குழந்தையின் தந்தை, அலவத்துகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் குறித்த பெண்ணைக் கைதுசெய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அலவத்துகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post